சினிமா செய்திகள்
ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து அசத்தல்!

தமிழ் சினிமாவில் பல பேருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் வழக்கம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. அவ்வகையில் தற்போது, ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை சம்பவங்களை திரைப்படமாக எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமானுஜர் வரலாறு
ஹயக்ரீவா சினி ஆர்ட்ஸ் சார்பாக, ஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை எல்லாம் ஒன்றாக தொகுத்து திரைக்கதை எழுதி, அதனை தயாரித்து, ஸ்ரீ ராமானுஜர் வேடத்தில் டி.கிருஷ்ணன் நடித்துள்ள திரைப்டம், ‘ஸ்ரீ ராமானுஜர்’. மேலும் இப்படத்தில் ராதாரவி, அனு கிருஷ்ணா, காயத்ரி, சோனியா சிங் வாலா, கோட்டா சீனிவாச ராவ், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீமன் மற்றும் கவுதமி போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். வாலி பாடல்கள் எழுத, மாதவராஜ் ஒளிப்பதிவு செய்து உள்ளார். ரங்கமணி வசனம் எழுதி உள்ளார்.
ரவி வி.சந்தர் இயக்கியுள்ள இப்படம் குறித்து நடிகர் டி.கிருஷ்ணன் கூறுகையில், ‘ராமானுஜர் இந்து மதத்தில் புரட்சி செய்த மகான் மட்டுமின்றி, இந்து மத தர்மத்தின் லெஜண்ட் ஆவார். சாதி வேறுபாடு அற்ற சமுதாயம் வேண்டும் எனவும், அனைத்து மதத்தினருக்கும் நற்கதி எனுப் உணர்வையும் மக்களிடையே உருவாக்கியவர். மறைந்த கவிஞர் வாலியின் பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். வரலாற்றுப் படம் என்பதால் அதிக கவனத்துடன் படமாக்கி உள்ளோம்’ என்று தெரிவித்தார்.