Connect with us

தமிழ்நாடு

மீண்டும் முதல்ல இருந்தா? வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு என அறிவிப்பு!

Published

on

rain

வங்க கடலில் கடந்த மாதத்தில் இரண்டு முறை காற்றழுத்த தாழ்வு தோன்றியதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது என்பதும் அதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த நவம்பர் மாதத்தில் கனமழை பெய்ததன் காரணமாக ஒரு சில நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றி இருப்பதாகவும் இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

rain கேரள கடல்பகுதியில் தோன்றிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பொது மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே அனைத்து கடலோர பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது என்றும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது மழையின் தீவிரம் குறைந்து பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் காணப்பட்டு வரும் நிலையில் கேரள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை நேற்று நள்ளிரவு மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

rainஇந்த நிலையில் கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக டிசம்பர் 3ஆம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில உள் மாவட்டங்களிலும் டிசம்பர் 4 முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் டிசம்பர் 5-ஆம் தேதி அந்தமான் பகுதியில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்பதால் அதன் பிறகு மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?