தமிழ்நாடு
தமிழ்நாட்டின் வருவாய் 36.4% அதிகரிப்பு, கடன் வாங்குவது 30.3% ஆக சரிவு!
Published
2 months agoon
By
Tamilarasu
தமிழ்நாட்டின் வருவாய் 36.4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும், கடன் வாங்குவது 30.3 சதவிகிதமாக குறைந்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-2023 நிதியாண்டின் முதல் பாதியில் தமிழ்நாட்டின் நிதி செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது கடன் வாங்கும் விகிதம் 30.3 சதவிகிதம் சரிந்து 24,403 கோடி ரூபாய்க் கடன் வாங்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு இதுவே 35,000 கோடி ரூபாயாக இருந்தது என ஆர்பிஐ வெளியிட்டுள்ள தரவுகளின் படி தெரியவந்துள்ளது.
2022-2023 நிதியாண்டின் முதல் பாதியில் தமிழ்நாட்டின் வருவாய் 1.12 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதுவே சென்ற ஆண்டு 85,209.74 கோடி ரூபாயாக இருந்தது.
மாநிலத்தின் வரி வருவாய் 36.4 சதவிகிதம் அதிகரித்து 68,638 கோடி ரூபாயாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு இதுவே 50,324 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
You may like
விரைவில் ஊட்டி, ஏற்காட்டிற்கு ஹெலிகாப்டரில் சுற்றுலா செல்லலாம்.. தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் அசத்தல் அறிவிப்பு!
சீனாவுக்கு போட்டியாக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் மேட்-இன்-தமிழ்நாடு தயாரிப்பு!
தமிழ்நாட்டில் தொழிற்சாலையைத் தொடங்கும் பிரபல ஷூ நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?
முக்கிய அறிவிப்பு.. இந்த தேதிகளில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் உடனே இதை செய்யுங்கள்!
தமிழ்நாட்டில் மெகா சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ரூ.25,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. எந்த மாவட்டத்தில் தெரியுமா?