சினிமா
பெண்களை இப்படி சொல்வது அநாகரிகம்’: சமீரா ரெட்டி!

பெண்களை இப்படிச் சொல்வது அநாகரிகம் என நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘வாரணம் ஆயிரம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. ‘அசல்’, ‘வேட்டை’ போன்ற படங்களில் நடித்தவர். இப்போது முழு நேரமாக சமூகவலைதளங்களில் இன்ஃபுளூயர்சாக இருந்து வருகிறார். இந்த நிலையில், நடிகைகளை உருவத்தை வைத்து கேலி செய்வது குறித்து பேசி இருக்கிறார்.
அவர் பேசியிருப்பதாவது, “நான் நடிகையாக இருந்து தாயாக மாறி இருக்கிறேன். ஒருவரின் உடலின் நிறத்தை வைத்தோ, தலைமுடி நரைத்து விட்டதை வைத்தோ பெண்களையும் பொதுவாக மனிதர்களையும் மதிப்பிடுவது அநாகரிகம். பெண்கள் எப்போதும் அவர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நம் உடல் சொல்வதைக் கேட்க வேண்டும்.
நம் ஆரோக்கியம் நமக்கு மட்டுமல்ல, நம் குடும்பத்தையும் சார்ந்தது. எனவே, நம் குழந்தைகளுக்கும் நாம் சரியான உணவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும். நொறுக்குத்தீனி போன்றவற்றை நாம் அவர்களுக்கு காட்டக் கூடாது” என பேசியுள்ளார் சமீரா ரெட்டி.























