சினிமா செய்திகள்
கோலமாவு கோகிலா’ இந்தி ரீமேக்: ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்

நெல்சன் இயக்கிய முதல் திரைப்படமான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்ததே
இந்நிலையில் இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வந்தது என்பதும் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
குட்லக்ஜெர்ரி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஹாட்ஸ்டாரில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த படத்தில் நயன்தாரா கேரக்டரில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது




















