சினிமா செய்திகள்
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் தற்போது ஓடிடியில் வெளியாவது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படம் வரும் 27ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.60 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில் மிகப்பெரிய தொகைக்கு ஹாட்ஸ்டார் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
Here we go, #KanmaniPlusKhatija on #DisneyPlusHotstar from May 27.. ❤💚#LoveyouTwo #KaathuvaakulaRenduKaadhal @VijaySethuOffl @VigneshShivN @Samanthaprabhu2 #Nayanthara @anirudhofficial @7screenstudio @Rowdy_Pictures #KRK pic.twitter.com/RaPOL42Ncv
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) May 18, 2022