Connect with us

சினிமா செய்திகள்

குடியரசு தினத்துக்கான சிறந்த படம் மணிகர்ணிகா – வைரலாகும் டிரைலர்!

Published

on

கங்கனா ரனாவத் இயக்கி நடிக்கும் மணிகர்ணிகா படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இந்திய அளவில் டிரெண்டிங்கில் முன்னிலை வகித்து வருகிறது. டிரைலர் வெளியிடப்பட்ட 7 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் இதனை பார்த்துள்ளனர்.

இயக்குநர் க்ரிஷ் உடன் இணைந்து இந்த படத்தை கங்கனா ரனாவத் இயக்கியுள்ளார். சுதந்திர போராட்ட வீரமங்கை ஜான்சி ராணி லக்‌ஷ்மி பாயின் வாழ்க்கை வரலாறு தான் இந்த மணிகர்ணிகா.

கணவனை இழந்து, தாய் நாட்டையும் இழக்கும் சூழலுக்கு தள்ளப்படும் ஒரு ராணி, தனது மக்களுக்காகவும் தனது தாய்நாட்டுக்காகவும், ஆங்கிலேயரின் பீரங்கிகளை வாள் கொண்டு எதிர்த்து போராடி வீரமரணம் அடையும் கதை தான் மணிகர்ணிகா.

பாகுபலி படத்தை இயக்கிய ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் மெர்சல் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் திரைக்கதை எழுதியுள்ளார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 25ம் தேதி மணிகர்ணிகா படம் உலகம் முழுவதும் ரிலீசாகிறது. தமிழிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தமிழ் டிரைலர் இதுவரை வெளியிடப்படவில்லை.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your business page ranks locally on google with dr68 authority, turning searches into customers..