உலகம்
பதவி விலகினார் ஜெஃப் பெசோஸ்: புதிய அமேசான் தலைவர் யார்?

உலகின் நம்பர் ஒன் இகாமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் பதவி விலகியதை அடுத்து புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்த அதன் நிறுவனர் ஜெப் பெசோஸ் இன்று விலகியுள்ளார். 1994 ஆம் ஆண்டு சியாட்டில் என்ற பகுதியில் கார் நிறுத்தம் உள்ள இடத்தில் அமேசான் நிறுவனத்தை தொடங்கினார் ஜெஃப் பெசோஸ். 27 ஆண்டுகளில் 119 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் வளர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் புத்தக விற்பனையில் தொடங்கிய அமேசான் காய்கறி முதல் கணினி வரை வங்கித்துறை உள்பட பலதுறைகளை தன்னுடைய நிறுவனத்துடன் இணைந்து வணிகம் செய்தார். இந்த நிலையில் அமேசான் சி.இ.ஓ பதவியில் இருந்து இன்றுடன் ஜெஃப் பெசோஸ் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக அமேசான் தலைமை செயல் அதிகாரியாக ஆன்டி ஜஸ்ஸி என்பவர் பொறுப்பு ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் சிஇஓ பதவியிலிருந்து விலகியதை அடுத்து விண்ணில் செல்வதற்காக ஜெஃப் பெசோஸ் திட்டமிட்டுள்ளார். ஜூலை 20ஆம் தேதி விண்ணில் செல்ல உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.


















