உலகம்
உலகின் மிகப்பெரிய திரையரங்கு குழுமத்தை வாங்கும் அமேசான்.. பரபரப்பு தகவல்..!

உலகின் மிகப்பெரிய திரையரங்கு குழுமத்தை அமேசான் நிறுவனம் வாங்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
உலகின் நம்பர் ஒன் இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் தற்போது பல்வேறு பிரிவுகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உலகின் மிகப்பெரிய திரையரங்கு குழுமத்தை வாங்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கான ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
ஏஎம்சி எண்டர்டெயின்மெண்ட் ஹோல்டிங் என்ற நிறுவனத்தின் கீழ் உள்ள திரையரங்குகளை தான் அமேசான் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது என்று கூறப்படுகிறது இந்த செய்தி வெளியானதும் இந்நிறுவனத்தின் பங்குகள் நேற்று 21 சதவீதம் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் இந்நிறுவனத்தை கையகப்படுத்துதல் திட்டங்களை ஆராய தனது முதலீட்டு ஆலோசர்கள் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு பிரமுகர்களிடம் ஆலோசனை கேட்டு வருவதாக கூறப்படுகிறது அமேசான் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படும் உலகின் நம்பர் ஒன் திரையரங்கு குழுமமாக இருக்கும் ஏஎம்சி என்டேர்டைன்மென்ட் ஹோல்டிங் கடந்த 1920 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் உள்ள பல நகரங்களில் உள்ளது என்பதும் அமெரிக்காவைத் தாண்டி பல நாடுகளில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் மதிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டின் படி ரூ.253 கோடி என்று கூறப்படுகிறது.