வணிகம்
EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!
Published
4 நாட்கள் agoon
By
Poovizhi
EPFO KYC Update: PF கணக்கில் KYC புதுப்பிப்பு ஏன் முக்கியம்? ஆன்லைனில் செய்வது எப்படி?
ஊழியர்களின் ஓய்வுக்கால சேமிப்பை பாதுகாக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்கள் எதிர்கால நிதி பாதுகாப்பை உருவாக்க முடிகிறது. ஆனால், PF கணக்கிலிருந்து பணம் பெறுதல், கணக்கை மாற்றுதல் அல்லது ஆன்லைன் கிளைம்களை சமர்ப்பித்தல் போன்ற சேவைகளை சிரமமின்றி பயன்படுத்த KYC (Know Your Customer) விவரங்களை புதுப்பித்திருப்பது கட்டாயமாகும்.
EPF-க்கு 8.25% வட்டி
நடப்பு நிதியாண்டிற்கான 8.25 சதவீத வட்டி விகிதத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் EPF மற்றும் VPF உறுப்பினர்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 8.25% வட்டியைப் பெறுகின்றனர்.
KYC புதுப்பிப்பு ஏன் அவசியம்?
PF கணக்குடன் ஆதார், PAN மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் இணைக்கப்பட்டிருந்தால்:
- PF பணத்தை விரைவாகப் பெறலாம்.
- PF கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றலாம்.
- ஆன்லைன் கிளைம்கள் எளிதாக செயல்படும்.
- E-Nomination பதிவு செய்ய முடியும்.
- அடையாளச் சரிபார்ப்பு தொடர்பான சிக்கல்கள் தவிர்க்கப்படும்.
தேவைப்பட்டால், ஆதார் இணைப்பை UMANG செயலி மூலமாகவும் மேற்கொள்ளலாம்.
EPFO இணையதளத்தில் KYC புதுப்பிப்பது எப்படி?
EPFO உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து சில எளிய படிகளைப் பின்பற்றி KYC விவரங்களை புதுப்பிக்கலாம்.
படி 1
EPFO Member Portal-ல் Login செய்து Profile Information பகுதிக்குச் செல்லவும்.
படி 2
PAN அல்லது Bank Account விவரங்கள் Not Available என்று இருந்தால், அவற்றை புதுப்பிக்க வேண்டும்.
படி 3
Manage → KYC என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து தேவையான விவரங்களை பதிவு செய்யவும்.
வங்கி கணக்கை இணைப்பது எப்படி?
- Bank விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
- வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டை பதிவு செய்யவும்.
- Verify IFSC மூலம் கிளை விவரங்களை உறுதிப்படுத்தவும்.
- விதிமுறைகளை ஏற்று Save செய்யவும்.
- ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP மூலம் சரிபார்க்கவும்.
PAN கார்டை இணைப்பது எப்படி?
- PAN விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
- PAN எண் மற்றும் PAN கார்டில் உள்ள பெயரை பதிவு செய்யவும்.
- தகவல்களை சேமித்த பிறகு Aadhaar OTP மூலம் சரிபார்ப்பு செய்யவும்.
KYC ஒப்புதல் நடைமுறை
நீங்கள் பதிவேற்றிய வங்கி மற்றும் PAN விவரங்கள் முதலில் சம்பந்தப்பட்ட வங்கியால் சரிபார்க்கப்படும்.
அதன்பின் “Pending with Employer for Digital Signing” என்ற நிலை காணப்படும்.
நிறுவனம் டிஜிட்டல் கையொப்பம் மூலம் ஒப்புதல் அளித்ததும் KYC செயல்முறை நிறைவடையும். பொதுவாக இந்த செயல்முறைக்கு 7 முதல் 10 வேலை நாட்கள் வரை ஆகலாம். தாமதம் ஏற்பட்டால் நிறுவனத்தின் HR பிரிவை தொடர்புகொள்ளலாம்.
PF கணக்கில் E-Nomination செய்வது எப்படி?
KYC வெற்றிகரமாக முடிந்த பிறகே E-Nomination வசதியை பயன்படுத்த முடியும்.
இதற்கான நடைமுறைகள்:
- Manage → E-Nomination பகுதிக்குச் செல்லவும்.
- சுயவிவரத்தில் புகைப்படம் மற்றும் முகவரி விவரங்களை புதுப்பிக்கவும்.
- Add Family Details மூலம் வாரிசுதாரரின் தகவல்களை பதிவு செய்யவும்.
- புகைப்படத்தை பதிவேற்றவும்.
- E-Sign விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
- ஆதார் OTP மூலம் டிஜிட்டல் கையொப்பமிட்டு செயல்முறையை நிறைவு செய்யவும்.
முக்கிய குறிப்பு
PF கணக்கில் ஆதார், PAN, வங்கி கணக்கு மற்றும் KYC விவரங்களை சரியாகப் புதுப்பித்திருந்தால், PF பணம் பெறுதல், கணக்கு மாற்றம், ஆன்லைன் கிளைம், E-Nomination உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் எளிதாகவும் விரைவாகவும் பயன்படுத்த முடியும். எனவே, உறுப்பினர்கள் தங்களது KYC தகவல்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதை அவ்வப்போது சரிபார்ப்பது நல்லது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

EPFO உறுப்பினர்களுக்கு சூப்பர் அறிவிப்பு! EPF கணக்கில் உள்ள பிழைகளை இனி வீட்டிலிருந்தபடியே சில நிமிடங்களில் சரி செய்யலாம்

இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு புதிய டிஜிட்டல் வசதி: டிஜிலாக்கரில் பிஎஃப் பாஸ்புக் மற்றும் யுஏஎன் அட்டை.!












