Connect with us

இந்தியா

காஷ்மீர் ஆளுநரை திட்டியவர்கள் இன்று பாராட்டுகிறார்கள்!

Published

on

உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு மெகபூபா ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க முயன்றபோது அம்மாநில சட்டசபையை ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்து உத்தரவிட்டார். அப்போது அவரை பலரும் விமர்சித்தனர். ஆனால் அன்று விமர்சித்தவர்கள் அவரது நடவடிக்கையை இன்று பாராட்டுகிறார்கள்.

எம்எல்ஏக்கள் குதிரை பேரம், எதிர் சித்தாந்தங்கள் உள்ள கட்சிகள் இணைவது மூலம் நிலையான ஆட்சியைத் தர முடியாது போன்றவற்றையும் ஆளுநர் காரணமாகக் கூறி சட்டசபையை கலைத்தார். இதனை ஏற்காத உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேற்று பேசிய ஆளுநர் சத்யபால் மாலிக், ஆட்சி அமைக்க மெகபூபா முஃப்தி உரிமை கோரிய தினம் விடுமுறை நாளாகும். அவர்கள் என்னை ஃபேக்ஸ் இயந்திரத்தின் அருகில் எப்போதும் இருப்பேன் என்று நினைத்தார்களா என்பது தெரியவில்லை. மெகபூபாவும், உமர் அப்துல்லாவும் இணைந்து ஆட்சி அமைப்பதில் முனைப்புடன் இருந்திருந்தால், முன்னரே கடிதம் அனுப்பியிருக்க வேண்டும் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்துபடி, பேரவையைக் கலைப்பதற்கு முன்பு, குடியரசுத் தலைவரிடமோ, நாடாளுமன்றத்திடமோ நான் முன் அனுமதி பெற வேண்டியதில்லை. மத்திய அரசின் விருப்பத்தின்படி சஜ்ஜத் லோனேவை முதல்வராக்கியிருந்தால், நேர்மையற்ற மனிதராக வரலாற்றில் இடம்பெற்றிருப்பேன். என்னைத் தவறாக நினைத்தாலும் கவலையில்லை. நான் செய்தது சரி என்றே கருதுகிறேன் என்றார்.

இதற்கு மெகபூபா தற்போது பாராட்டை தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து வரும் உத்தரவை ஆளுநர் பின்பற்ற மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. முன்னெப்போதும் இல்லாத இந்த நடவடிக்கை மாநிலத்தில் ஜனநாயகத்தைக் கொடுத்துள்ளது என மெகபூபா டுவிட்டரில் பாராட்டியுள்ளார். அதேப்போல உமர் அப்துல்லா தனது டுவிட்டரில், குதிரை பேரம், பணம் ஆகியவற்றின் மூலம் பாஜக ஆட்சி உருவாக்க இருந்த நிலையில், அதைத் தடுத்து நிறுத்தியதற்காக ஆளுநருக்கு வாழ்த்துகள் என்றார்.

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?