தமிழ்நாடு
பதவியில் இருந்து விலகி விடுவேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்கள் மத்தியில் பேச்சு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில், தான் வகிக்கும் பதவியில் சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகுவேன் என பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#image_title
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க காலம் தாழ்த்தியதும், அதனை முதன்முறை ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியதும் தமிழக அரசியல் கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. மேலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி நிலுவையில் வைத்திருந்தாலே அவை நிராகரிக்கப்பட்டதா அர்த்தம் என ஆளுநர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடினார். அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் மொபைல் பொழுதுபோக்கில் நேரம் செலவிடுவதை விட்டுவிட்டு பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். மனதை ஒழுங்குபடுத்த யேகாசனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், நான் வகிக்கும் பதவியில் எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது பதவியில் இருந்து விலகி விடுவேன் என்றார்.