சினிமா செய்திகள்
Nayanthara 75: மீண்டும் ஜோடி சேரும் பிரபல ஹீரோ?

நடிகை நயன்தாராவின் 75வது படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த ஹிட் ஹீரோ மீண்டும் இணைய இருக்கிறார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் நடிகை நயன்தாரா. ஹீரோயின் செண்ட்ரிக் படங்களில் கவனம் செலுத்தி வருபவர் இப்பொழுது பாலிவுட்டிலும் எண்ட்ரியாக இருக்கிறார்.
ஷாருக்கான் உடன் அட்லீ இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் மும்பையில் தற்போது பிஸியாக இருக்கிறார் நயன்தாரா. இப்பொழுது ‘ஜவான்’ படத்தை அடுத்து அவருடைய எழுபத்தைந்தாவது படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது.
நாட் ஸ்டுடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து நயன்தாராவின் 75வது படத்தைத் தயாரிக்கிறது. புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்க உள்ள இந்த படத்திலும் நயன்தாரா ஹீரோயின் செண்ட்ரிக் கதையாகவே தேர்ந்தெடுத்துள்ளார்.
‘ராஜா ராணி’ படத்திற்கு பிறகு நடிகர்கள் ஜெய் மற்றும் சத்யராஜ் இந்த படத்திலும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ளனர். ரெடின் கிங்ஸ்லே இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த வருட இறுதிக்குள் படம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
‘ராஜா ராணி’ படத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் ஜெய் இந்த படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.