Connect with us

சினிமா செய்திகள்

சரவணா ஸ்டோர்ஸ் ஓனருடன் நடிக்க மறுத்த நயன்தாரா?

Published

on

பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்டுன்னு டிவிக்களில் நடனமாடி அதிரடி காட்டிய சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் சரவணன் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

அவருக்கான விளம்பர படங்களை எடுத்து வரும் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் புதிய தமிழ் படம் ஒன்றில் சரவணன் அறிமுகமாகிறார்.

அவருக்கு ஜோடியாக நயன்தாராவை ஃபிக்ஸ் பண்ண எவ்வளவோ முயற்சிகள் நடந்து வருவதாக பல்வேறு செய்திகள் கிசுகிசுக்கள் வெளி வந்த வண்ணமாக இருந்தன.

இந்நிலையில், தற்போது புதிய பூதம் ஒன்று கிளம்பியுள்ளது. அது என்ன வென்றால், நடிகை நயன்தாராவிற்கு ரூ. பத்து கோடி தருவதாக சொல்லியும் சரவணனுடன் நடிக்க மறுத்துவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளன.

ஹன்சிகா மற்றும் தமன்னா முதலில் சரவணா ஸ்டோர்ஸ் சரவணனுடன் விளம்பரப் படங்களில் நடித்தனர்.

பின்னர் அவர்களின் மார்க்கெட் அடியோடு தமிழில் சரிந்து விட்டது என்ற பேச்சு எழுந்த நிலையில், அவர்களும் அதன் பின்னர் அவருடன் நடிக்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், நயன்தாராவும் மறுத்துள்ளதால், எந்த நடிகையை புக் செய்வது என்ற சிந்தனையில் ஜேடி ஜெர்ரி உள்ளார்களாம்.

இத்தனைக்கும் நயன்தாரா தற்போது 3 கோடி ரூபாய் தான் ஒரு படத்திற்கு வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Cotton tote factory produceert hoogwaardige tassen van canvaskatoen.