சினிமா செய்திகள்
பிக்பாஸ் இல்லத்தில் அதிரடியாக நுழைந்த போலீஸ்; கைது செய்யப்படுவாரா மீரா மிதுன்!

சர்ச்சையான பிரபலங்களை அழைத்து பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துவது வெளிநாடுகளிலும், இந்தி பிக்பாஸிலும் வழக்கமாக நடைபெறும் நடைமுறைதான்.
இந்த மூன்றாவது சீசனில், வனிதா, மீரா மிதுன் என வழக்குகள் அதிகமாக இருக்கும் பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுனிடம், நிகழ்ச்சி நடைபெறும் ஈவிபி பிலிம் சிட்டியில் எழும்பூர் காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ‘மிஸ் தமிழ்நாடு 2019’ என்ற நிகழ்ச்சி நடத்தப்போவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப் மீரா மிதுன் மீது எழுந்துள்ள புகாரின் பேரில் இந்த விசாரணை நடைபெறுகிறது.
இந்த விசாரணையின் முடிவில் மீரா மிதுன் கைது செய்யப்படுவாரா இல்லை இது வெறும் நிகழ்ச்சியின் டிஆர்பி ஏற்றும் நடவடிக்கையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






















