உலகம்
3,200 ஊழியர்களை நீக்கிய கோல்ட்மேன் சாக்ஸால் .. பாதிக்கப்பட்ட இந்திய கிராமத்து பெண்ணின் வருத்தமான பதிவு
Published
3 weeks agoon
By
Shiva
அமெரிக்காவில் உள்ள கோல்ட்மேன் சாக்ஸால் என்ற நிறுவனம் சமீபத்தில் 3200 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நிலையில் அவர்களில் ஒருவராக இந்திய கிராமத்தில் இருந்து சென்ற பெண் ஒருவரின் வருத்தமான லிங்க்டின் பதிவால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்கள் சிறுவ நிறுவனங்கள் என பாகுபாடு இல்லாமல் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். பண வீக்கம், பொருளாதார மன்ற நிலை காரணமாக நிறுவனத்தின் செலவினங்களை குறைப்பதற்காக வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கோல்டுமேன் சாக்ஸால் என்ற நிறுவனம் சமீபத்தில் 3200 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இதில் எச்1 பி விசாவில் சென்ற இந்திய தொழிலாளர்களும் சிலர் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கோல்ட்மேன் சாக்ஸால் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த சோனி என்ற பெண் தனது லிங்க்டின் பக்கத்தில் வருத்தமாக பதிவு செய்துள்ளார். நான் இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து படித்து முன்னேறி அமெரிக்காவில் வேலை பெற்றேன். எனது குடும்பத்தில் முதுகலை பட்டம் பெற்று வெளிநாட்டில் வேலை பார்க்கும் முதல் நபர் என்ற பெருமை கொள்கிறேன். சமூக மற்றும் நிதி கட்டுப்பாடுகளை கடந்து நான் இங்கு வந்தது ஒரு பெரிய சவாலாகவே இருந்தது.
இந்த நிலையில் தற்போது நான் இங்கு பணி நீக்கம் செய்யப்பட்டது வேதனை அளிக்கிறது. ஆனால் இது அமெரிக்காவின் எனது பயணத்தின் முடிவாக இருக்காது. நான் கண்டிப்பாக தொடர்ந்து போராடி எனது குறைந்த நேரத்தை பயன்படுத்தி புதிய வேலையை தேடுவேன் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் லிங்க்டின் பயனர்கள் பலர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

You may like
-
ஃபேஸ்புக் ஊழியர்களுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி.. இதற்கு முடிவே இல்லையா?
-
கூகுளுக்கு வேலைக்கு ஆள் எடுப்பவரே வேலைநீக்கம்.. அதுவும் எப்படி தெரியுமா?
-
23 வயதிலேயே வேலைநீக்கம்.. பெங்களூரு ஐஐடி பட்டதாரியின் பரிதாப நிலை
-
பர்கர் வாங்க கடைக்கு சென்றது ஒரு குற்றமா? பணியில் இருந்து நீக்கப்பட்ட BMW ஊழியர்!
-
கூகுளில் வேலை பார்க்கின்றீர்களா? உடனே வேறு வேலை தேடுங்கள்: அதிர்ச்சி தகவல்
-
ஊழியர்களின் வேலைநீக்கத்தை தடுக்க தனது பதவியை ராஜினாமா செய்த முதலாளி!