சினிமா செய்திகள்
பிரபாஸ் நடிக்கும் ‘ராமாயணம்’ படம்: முதல் நாள் படப்பிடிப்பிலேயே தீவிபத்து!

ராமாயண கதையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபாஸ் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் ஆதிபுருஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று மும்பையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டது. பிரமாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நிமிடங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராமாயண கதையை மையப்படுத்தி ராமர் கேரக்டரில் பிரபாஸூம், ராவணன் கேரக்டரில் சயித் அலிகானும் நடித்து கொண்டிருந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து படக்குழுவினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த போதையிலும் படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த செட் அனைத்தும் எரிந்து நாசமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமாயண கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் ‘ஆதி புருஷ்’ என்ற திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக மீண்டும் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்க இன்னும் ஒருசில வாரங்கள் ஆகலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.









