சினிமா
பிரபாஸுக்கு போட்டியாக ராமராக களமிறங்கும் ரன்பீர் கபூர்.. ராவணன் யார் தெரியுமா?

தங்கல் படத்தை இயக்கிய இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் பாலிவுட்டில் இன்னொரு ராமாயணம் படம் பிரம்மாண்டமாக உருவாகப் போவதாக அட்டகாசமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படமே ராமாயணம் கதை தான் என்றாலும் அந்த படம் லைவ் ஆக்ஷன் எனும் அனிமேஷன் டைப் படம் தான்.

#image_title
இந்நிலையில், பிரபாஸுக்கு போட்டியாக மீசை வைக்காத ராமராக ரன்பீர் கபூர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், அந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அவரது மனைவி ஆலியா பட்டே சீதா தேவி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
ஏற்கனவே இருவரும் பிரம்மாஸ்திரா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். பெரும் பொருட்செலவில் 5 ஆண்டுகளாக உருவான அந்த படம் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 400 கோடி வசூல் செய்திருந்தது.
அமிதாப் பச்சன், ஷாருக்கான், நாகார்ஜுனா, மெளனி ராய் உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்திருந்தனர்.

#image_title
இந்நிலையில், ராமாயணா எனும் டைட்டிலில் உருவாக உள்ள இந்த இதிகாச காவிய திரைப்படத்தில் கணவனும் மனைவியும் மீண்டும் ஜோடியாக இணைந்து நடிக்க உள்ளனர்.
இதில், ஹைலைட் என்னவென்றால் ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகரான நம்ம கேஜிஎஃப் ராக்கி பாய் யஷ் தான் நடிக்கப் போவதாக கூறுகின்றனர். 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் 2 பாகங்களாக ராமாயணம் படத்தை இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்க உள்ளதாக பாலிவுட்டே பரபரக்கிறது.
விரைவில், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.