சினிமா
என்னோட அப்பா என்பதால் சொல்லல.. அப்பா எதுக்குமே அஞ்சமாட்டார் – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!

விஜய்சேதுபதியின் லாபம் படத்திற்கு பிறகு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் தெலுங்கில் அடுத்தடுத்து பெரிய படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன்.
கிராக் படம் தெலுங்கில் ஹிட் அடித்த நிலையில், அடுத்தடுத்து சீனியர் நடிகர்கள் ஸ்ருதிஹாசனை ஜோடியாக போட்டு வருகின்றனர்.

#image_title
இந்த ஆண்டு ஜனவரி மாதம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு டோலிவுட்டில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி மற்றும் வால்டர் வீரய்யா உள்ளிட்ட 2 படங்களிலுமே ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயின்.
நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கும் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கும் ஜோடியாக நடித்த நிலையில், வயதான நடிகர்களுடன் ஜோடி போட ஆரம்பித்து விட்டார் ஸ்ருதிஹாசன் என ட்ரோல்களும் பறந்தன.
ஆனால், அடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் சலார் படத்திலும் ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் வெளியானால் இந்தியளவில் ஸ்ருதிஹாசனின் மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், சீக்கிரமே தமிழில் நடிப்பேன் என்றும் தனது அப்பா கமல்ஹாசன் குறித்த கேள்விக்கு, என்னோட அப்பா என்பதால் சொல்லவில்லை.. திரைத்துறையிலே பலர் என் அப்பா செய்த சாதனைகளை எல்லாம் யாராலும் செய்ய முடியாது என சொல்கின்றனர். அது முற்றிலும் உண்மை தான். அவருக்கு எதுக்குமே அஞ்சமாட்டார். சோதனை முயற்சிகளை செய்து பார்ப்பதை எப்போதுமே தொடர்ந்து கொண்டு இருப்பதால் தான் அவர் தனித்துவமாக தெரிகிறார் என ஸ்ருதிஹாசன் பேசி உள்ளார்.
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் தென்னாப்பிரிக்காவில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அந்த படம் வெளியாகுமா? அல்லது அடுத்த பொங்கலுக்கு தள்ளிப் போகுமா? என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.