சினிமா செய்திகள்
ராயல் லுக் ‘எமி ஜாக்சன்’… – கான்ஸ் 2021 திரைப்பட விழாவில் ஒய்யார நடை..!

உலகப் பிரபலமான கான்ஸ் திரைப்பட விழாவில் நடிகை எமி ஜாக்சனின் ஒய்யார ராஜ அலங்கார நடை வைரலாகி வருகிறது.

கான்ஸ் திரைப்பட விழா கடந்த ஜூலை 6-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரையில் இந்தியா சார்பில் பாலிவுட் நடிகைகள் யாரும் இன்னும் அலங்கார அணிவகுப்பில் தோன்றவில்லை. இந்த சூழலில் எமி ஜாக்சன் பாலிவுட் நடிகைகள் வரிசையில் முதல் ஆளாக அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளார்.
அலங்கார அணிவகுப்புக்குப் பின்னர் திரைப்பட விழாவின் ஹங்கேரியைச் சேர்ந்த ‘தி ஸ்டோரி ஆஃப் மை வைஃப்’ என்னும் திரைப்படத்தை கண்டுகளித்தார். சோப்பர்டு என்னும் வைர நகைக்கடைக்காக இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளார் எமி ஜாக்சன். எமி அணிந்திருந்த வைர நகைகள் உடனான புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
View this post on Instagram





















