சினிமா
மகனுடன் கண்ணாமூச்சி விளையாடும் எமி ஜாக்சன்; எவ்ளோ பெருசா வளர்ந்துட்டான் பாருங்க!

மதராசப்பட்டினம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் அச்சம் என்பது இல்லையே படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
அருண் விஜய் நடிப்பில் பல படங்கள் ஷூட்டிங் முடித்து ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடந்து வரும் நிலையில், இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title
நிச்சயதார்த்தம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைவதற்காக சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை எமி ஜாக்சன் கடைசியாக சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக 2.0 படத்தில் ரோபோவாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் ஜார்ஜ் பன்னாயுட்டுவை நிச்சயம் செய்து கொண்ட அவர் திருமணம் செய்து கொள்ளாமல் பார்ட்னராக வாழ்ந்து ஆண் குழந்தையையும் பெற்றுக் கொண்டார். ஆண்ட்ரியாஸ் என அந்த குழந்தைக்கு பெயர் வைத்து வளர்த்து வருகிறார்.

#image_title
மீண்டும் நடிக்கப் போகிறேன் என்கிற தனது ஆசையை சொன்ன நிலையில், ஜார்ஜ் பன்னாயுட்டுவுக்கும் எமிக்கு ஏற்பட்ட சண்டை காரணமாக இருவரும் பிரிந்தனர். அமெரிக்க நடிகரான எட் வெஸ்ட்விக்கை காதலித்து வருகிறார் எமி ஜாக்சன். இன்னொரு நடிகருடன் காதலில் எமி விழுந்த நிலையில் தான் அவருக்கும் அவரது பார்ட்னர் ஜார்ஜ் பன்னாயுட்டுவுக்கும் பிரேக்கப் ஆனதாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில், தனது குழந்தை ஆண்ட்ரியாஸ் உடன் கொஞ்சி விளையாடும் போட்டோக்களை தற்போது எமி ஜாக்சன் பதிவிட்டுள்ளார். அதில், அம்மாவின் கண்களை பொத்தியபடி ஆண்ட்ரியாஸ் கண்ணாமூச்சி விளையாடும் புகைப்படம் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி உள்ளது.