உலகம்
வொர்க் ப்ரம் ஹோம், வொர்க் ப்ரம் ஆபீஸ், எது சிறந்தது? ஃபேஸ்புக் மார்க் எழுதிய கடிதம்..!

வொர்க் ப்ரம் ஹோம் அல்லது அலுவலகத்தில் இருந்து பணி புரிவது ஆகிய இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து தனது ஊழியர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கு ஜூக்கர்பெர்க் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில் நேரில் வந்து பணி செய்யும் ஊழியர்களை விட வொர்க் ப்ரம் ஹோம் முறையில் பணி செய்ய ஊழியர்களின் பணி சிறப்பாக இல்லை என்று தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் 11 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்றும் அதனை அடுத்து தான் கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மெட்டா ஊழியர்களின் வேலை நீக்க பிரச்சனை இன்னும் முடியவில்லை என்றும் அடுத்த கட்ட வேலை நீக்கத்திற்கு அந்நிறுவனம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பகுப்பாய்வு சமீபத்தில் நடந்ததாகவும் ஊழியர்களின் பணி திறனுக்கு ஏற்பட மதிப்பெண்கள் போடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் தொலைதூரத்தில் இருந்து வொர்க் ப்ரம் ஹோம் முறையில் பணிபுரியும் ஊழியர்களை விட நேரில் அலுவலகம் வந்து பணிபுரியும் ஊழியர்களின் பணிகள் சிறப்பாக இருப்பதாகவும் நேரில் வந்து பணிபுரிவதையே நாங்கள் விரும்புகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து வொர்க் ப்ரம் ஹோம் முறையில் பணி செய்து வரும் ஊழியர்களின் பணி கேள்விக்குறியாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டெஸ்லா உள்பட பல நிறுவனங்கள் நேரில் வந்து பணி புரிய வேண்டும் கட்டாயப்படுத்தி உள்ளனர் என்பது ஒரு சில நிறுவனங்கள் மற்றும் வாரத்தில் மூன்று நாட்கள் நேரில் வந்து பணி புரிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் நேரில் வந்து ஊழியர்கள் பணி புரிய வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் அதற்கு இணங்காத ஊழியர்கள் பணி மிக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் இரண்டாவது கட்ட வேலை நீக்கம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.