சினிமா செய்திகள்
மலையாள சினிமாவை உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் துல்கர் சல்மான் படம்!

மலையாள நடிகர் துல்கர் சல்மான் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் திரைப்படம், இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் இவரது மார்க்கெட்டும் உயர்ந்தது.
கிங் ஆப் கோதா
தற்போது அபிலாஷ் ஜோஷி இயக்கும் கிங் ஆப் கோதா திரைப்படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான். ஜஸ்வர்யா லஷ்மி மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பீஜாய் ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். வருகின்ற ஓணம் பண்டிகை அன்று இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் முக்கிய அப்டேட்டை படக் குழுவினர் தற்போது வெளியிட்டு உள்ளனர். இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் உரிமையை, சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளது என அறிவித்துள்ளனர். இதுவரையில் வெளிவந்த மலையாளப் படங்களிலேயே அதிக விலைக்கு வியாபாரம் போனது இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் தான். கிட்டத்தட்ட ரூ.6 கோடிக்கு பிஸ்னஸ் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஹிருதயம் படத்தின் ஆடியோ ரைட்ஸ் தான் அதிக விலையான ரூ.2 கோடிக்கு பிஸ்னஸ் ஆனது என்பது குறிப்பிடதக்கது.