சினிமா செய்திகள்
ஒரே ஒரு ஹிட் படத்தால் சம்பளத்தை உயர்த்திய மிருணாள் தாகூர்!

சீதா ராமம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மிருணாள் தாகூர். இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் இவர் பிரபலமாகி விட்டார். பான் இந்தியா திரைப்படமாக வெளிவந்த இத்திரைப்படத்தில், இவரது நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.
துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க மிருணாள் தாகூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா என பலரும் நடிக்க, திரைக்கு வந்து செம ஹிட் அடித்த படம் தான் சீதா ராமம். இப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறினார் நடிகை மிருணாள் தாகூர்.
மிருணாள் தாகூர்
சீதா ராமம் எனும் ஒரே படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் மிருணாள் தாகூரின் மவுசு கூடி இருக்கிறது. மராத்தி திரைப்படத்தின் மூலமாக திரைத் துறையில் அறிமுகமான இவர், சில இந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் உருவாக இருக்கும் நானியின் 30வது திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
சம்பள உயர்வு
‘சீதா ராமம்’ திரைப்படத்தில் நடிப்பதற்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய மிருணாள் தாகூர், தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ள புதிய படத்திற்கு, சம்பளத்தை ரூ.6 கோடியாக உயர்த்தி உள்ளாராம். ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக, முன்னணி நடிகைகளுக்கு இணையாக இவர் சம்பளத்தை உயர்த்தி இருப்பது சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நயன்தாரா, சமந்தா மற்றும் ராஷ்மிகா என முன்னணி நாயகிகளே அதிக பட்சமாக ரூ. 5 கோடி வரை மட்டுமே சம்பளமாக பெறும் நிலையில், இவர் அதிக சம்பளம் வாங்கியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.