சினிமா செய்திகள்
செம ரொமான்ஸ் படம்: ‘ஹே சினாமிகா’ டிரைலர்
Published
11 months agoon
By
Shiva
நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ஹே சினாமிகா’ என்பதும் இந்த படத்தின் நாயகனாக துல்கர் சல்மான் மற்றும் நாயகிகளாக காஜல் அகர்வால், அதிதிராவ் ஹைத்ரி ஆகியோர் நடித்திருந்தனர் என்பது தெரிந்ததே.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவுபெற்று மார்ச் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் இரண்டரை நிமிட ட்ரெய்லர் வெளியாகி உள்ள நிலையில் அந்த டிரைலர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது
துல்கர் சல்மான் மற்றும் அதிதிராவ் ஹைத்ரியின் அழகான காதல் காட்சிகள் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளன. அதேபோல் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் இடையேயான நட்பு காட்சிகளும் இடம்பெற்றுள்ளன
இந்த நிலையில் துல்கர்-அதிதி தம்பதிக்கு இடையே ஏற்படும் பிரிவு காஜல்அகர்வாகால் ஏற்படுகிறது என்பதும் அந்த பிரிவு எப்படி சரி ஆகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது
இந்த டிரைலரை பார்க்கும்போது இந்த படம் செம ரொமான்ஸ் படமாக இருக்கும் என்று கருதப்படுவதால் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல காதல் படத்தை பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அழகான இந்த டிரைலர் இதோ:
You may like
-
’தெலுங்கு வாடை ரொம்ப ஓவரா இருக்குதே.. அதற்குள் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற்ற ‘வாரிசு’
-
’வாரிசு’ டிரைலர் ரிலீஸ் தேதி, சென்சார் தகவல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
-
என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? அஜித் அதகளப்படுத்தும் ‘துணிவு’ டிரைலர்
-
அருண்விஜய்யின் ‘யானை’ படத்தின் அட்டகாசமான டிரைலர்
-
‘தி க்ரே மேன்’ டிரைலர் ரிலீஸ்: தனுஷை சல்லடை போட்டு தேடும் ரசிகர்கள்
-
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ டிரைலர் வெளியிட்டு விழா: சில முக்கிய தகவல்கள்