சினிமா செய்திகள்
பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்பி ஜனநாதன் காலமானார்!

பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்பி ஜனநாதன் கடந்த இரண்டு நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் அவர் காலமானார் என மருத்துவமனை அறிவித்துள்ளது. அவருக்கு வயது 61.
இயற்கை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் ஜனநாதன், அதன் பின் பேராண்மை, ஈ, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
தற்போது அவர் விஜய் சேதுபதி, சுருதி ஹாசன் நடித்துள்ள ’லாபம்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் அந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே அவர் காலமாகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடினார் என்பதும் இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எஸ்பி ஜனநாதனின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


















