Connect with us

சினிமா செய்திகள்

ஆனாலும் இதை தவிர்க்க முடியவில்லை: முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குனர் பாலா வாழ்த்து!

Published

on

தேவையற்ற வாழ்த்துக்களை தவிர்ப்பீர்கள் என்று கூறியிருந்தீர்கள், ஆனாலும் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை தவிர்க்க முடியவில்லை என இயக்குனர் பாலா தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்
தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற ஸ்டாலின் அவர்களுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, விக்ரம் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நேரிலும் தொலைபேசியிலும் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ச்சியாக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட பல திரையுலக சங்கத்தினர்களும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை அரசியல் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல், யாருக்கும் வாழ்த்துத் தெரிவிக்காமல் இருந்த இயக்குநர் பாலா முதல்முறையாக முக ஸ்டாலின் அவர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,

தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதை தவிருங்கள் என்று கேட்டுக் கொண்டீர்கள். ஆனாலும் இதை தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரீகத்தின் உச்சம், நன்றிகள்! என்று கூறியுள்ளார்

மேலும் இயக்குனர் பாலா திருக்குறள் ஒன்றையும் மிக பொருத்தமாக தனது வாழ்த்துச் செய்தியில் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த திருக்குறள் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா33 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized6 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Pifteau henri biolinker.