சினிமா
‘பாய்’ ஓகே.. அது என்ன ஸ்லீப்பர் செல்ஸ்? இஸ்லாமிய சர்ச்சை கதையை கையில் எடுத்த படக்குழு!

புர்கா, தி கேரளா ஸ்டோரி, ஃபர்ஹானா என தொடர்ந்து இந்த சீசன் இஸ்லாமிய படங்களின் சீசன் என்கிற ரேஞ்சுக்கு இயக்குநர்கள் தொடர்ந்து இஸ்லாமிய கதைகளை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
லோ பட்ஜெட்டில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்து வரும் ஆதவா ஈஸ்வர் அடுத்ததாக ‘பாஸ் – ஸ்லீப்பர் செல்ஸ்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

#image_title
அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மதத் தலைவர்களை வைத்து வெளியிட்டுள்ளார் அருள் நிதி.
ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்திலேயே ஸ்லீப்பர் செல்ஸ் என இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், பாய் – ஸ்லீப்பர் செல்ஸ் என்றே டைட்டிலிலேயே சர்ச்சையை வைத்துள்ள நிலையில், இந்த படம் என்ன கதையை சொல்லப் போகுது, என்ன சர்ச்சையை கொண்டு வரப்போகுது என இஸ்லாமியர்கள் எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்க உள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டாம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.

#image_title
படத்தின் டைட்டில் பாய் என இருந்தாலும், போஸ்டரில் தலையில் குல்லா அணிந்து கொண்டும் நெற்றியில் திருநீர் பட்டை போட்டுக் கொண்டும், கையில் சிலுவையை வைத்துக் கொண்டும் ஆதவா ஈஸ்வர் டெரர் லுக் கொடுத்துள்ளார்.
மேலும், மதம் ஒரு அரசியல் போர்க்கருவி என்கிற வாசகமும் இடம்பெற்றுள்ள நிலையில், படத்தில் ஏகப்பட்ட மத சர்ச்சைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வரும் போது தான் உண்மையிலேயே படம் என்ன சொல்ல வருகிறது என்பது புரியும்.