சினிமா
கஸ்டடி பார்த்து கடுப்பான விஜய்.. வெங்கட் பிரபு உடன் இணையலாமா? வேண்டாமா? என யோசனை!

சன் பிக்சர்ஸ், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனங்கள் விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்க போட்டிப் போட்ட நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் அந்த ரேஸில் முந்திக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெறி இந்தி ரீமேக்கை அட்லீ மேற்பார்வை செய்ய உள்ள நிலையில், தளபதி 68 படத்தை இயக்க இப்போதைக்கு வரமுடியாது எனக் கூறிவிட்டாராம்.

#image_title
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இன்னமும் இயக்குநரையும் கதையையும் ஃபைனல் பண்ணாத நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் எங்க கிட்ட வெங்கட் பிரபு கதையோடு காத்திருக்கிறார் என சொல்ல, கதையை கேட்ட விஜய்க்கு பிடித்து விட்டதாம்.
ஆனால், சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி படத்தை பார்த்த விஜய்க்கு படமும் சரி வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

#image_title
மாநாடு படத்தை மட்டுமே வைத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க முடிவு செய்த விஜய் வெங்கட் பிரபு அதன் பின்னர் இயக்கிய மன்மத லீலை மற்றும் கஸ்டடி படங்கள் பெரிய வெற்றியை கொடுக்காத நிலையில், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக வெங்கட் பிரபு இயக்கத்தில் தலையை கொடுக்கலாமா? வேண்டாமா? என்கிற முடிவில் உள்ளாராம்.
அஜித்துக்கு மங்காத்தா கொடுத்தது போல விஜய் வந்தால் சூப்பர் ஹிட் படத்தை வெங்கட் பிரபு கொடுப்பார் என்றும் விஜய்யின் ஆலோசகர்கள் சொல்லி வரும் நிலையில், என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பது கூடிய விரைவில் தெரியவரும் என்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையா? அல்லது அனிருத் இசையா? என்கிற இன்னொரு பஞ்சாயத்தும் இந்த கூட்டணியில் இருப்பதகாக சினிமா வட்டார்த்தில் பேச்சுக்கள் பயங்கரமாக கிளம்பி உள்ளன.