Connect with us

சினிமா செய்திகள்

தனுஷூக்கு ஜோடியாகும் மூன்று நாயகிகள் இவர்கள் தான்!

Published

on

நடிகர் தனுஷ் சமீபத்தில் ஹாலிவுட் திரைப்படத்தை முடித்துவிட்டு தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்திலும், மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்திலும், அதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் படத்திலும், அதன்பின்னர் சேகர் கம்முலா இயக்கும் தமிழ் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் மித்ரன் ஜவஹர் இணையும் திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் மூன்று நாயகிகள் என்று ஏற்கனவே தகவல் வெளி வந்த நிலையில் தற்போது அந்த மூன்று நாயகிகள் பிரியா பவானி சங்கர், ஹன்சிகா மற்றும் நித்யா மேனன் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஹன்சிகா ஏற்கனவே தனுசுடன் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் முதன் முதலாக தனுஷ் படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா பவானி சங்கர், ஹன்சிகா மற்றும் நித்யா மேனன் ஆகிய மூவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் இருக்கும் அளவிற்கு கதை தயாரிக்கப்பட்டதாகவும் இந்த படம் மூன்று பேருக்கு மேல் பெருமை சேர்க்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இது ஒரு ஜாலியான ரொமான்ஸ் படம் என்றும் மூன்று நாயகிகளையும் மாறி மாறி ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை தனுஷ் காதலிக்கும் ரொமான்டிக் டைரக்டர் என்றும் தனுஷ் இந்த கேரக்டரில் பிச்சு உதறுவார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஏற்கனவே தனுஷ் ’யாரடி நீ மோகினி’, ‘குட்டி’ மற்றும் ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Vibetruyen miễn trừ mọi trách nhiệm liên quan đến các nội dung trên website này. Regler lektioner. Vui lòng đăng nhập vào tài khoản của bạn.