சினிமா செய்திகள்
ஓடிடியில் வெளியாகிறது ‘டெனட்’: கிறிஸ்டோபர் நோலன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

உலகம் முழுவதும் கிருஸ்டாஃபர் சோலனுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு என்பதும் அவரது படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய அளவில் வெற்றி வரும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடியில் மார்ச் 31ஆம் தேதி முதல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் மட்டுமே ஓடிடியில் இந்த படத்தை பார்க்க முடியும் என்றும் தமிழ் தெலுங்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் அமேசான் பிரைமில் இந்த படத்தை பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் உள்ள அமேசான் பயனாளிகளுக்கு இந்த படம் ஓடிடியில் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.








