ஆரோக்கியம்
சிக்கன் 65 வீட்டில் செய்யும் மசாலா ரெசிபி: அட்டகாச சுவை உண்டாக்கும் ரகசியம்!

சிக்கன் 65க்கு சுவை கொடுப்பது அதில் கலக்கப்படும் மசாலாவே முக்கியம். இந்த மசாலா சரியான அளவிலும் பக்குவத்திலும் இருந்தால், சிக்கன் 65 அட்டகாச சுவையுடன் தயாராகும்.
சிக்கன் 65 பொதுவாக பிரியாணியுடன் சைட் டிஷ் ஆகவும், வெறுமனே சாப்பிடவும் ருசியாக இருக்கும். அந்த சுவையை வீட்டிலேயே பெற இந்த ரெசிபி உதவும்.
தேவையான பொருட்கள்:
மைதா – 1/2 கிலோ
காஃப்லார் பவுடர் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 50 கிராம்
பூண்டு – 100 கிராம்
ஃபுட் கலர்
சுக்கு பொடி – 30 கிராம்
கரம் மசாலா – 1 1/2 ஸ்பூன்
மட்டன் மசாலா – 4 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பூண்டை ஒரு கடாயில் வைத்து, லேசாக எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, காஃப்லார், மஞ்சள், கரம் மசாலா, மிளகாய் தூள், ஃபுட் கலர் மற்றும் சுக்கு பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
அதில் வறுத்த பூண்டு மற்றும் உப்பும் சேர்க்கவும்.
அனைத்து பொருட்களும் நன்கு கலந்ததும், மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக அரைக்கவும்.
அரைத்த மசாலாவை காற்றுப் புகாத டப்பாவில் வைக்கவும்.
சிக்கன் 65 செய்யும் போது, ஒரு முட்டை மற்றும் இந்த கலவையை சேர்த்து நன்கு கிளறி சுட்டாலே போதும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க தேவையில்லை.














