உலகம்
ஒரே நாளில் விற்றுத்தீர்த்த பிஎம்டபிள்யூ 9 கார்: அப்படி என்ன சிறப்பம்சம்!

பிஎம்டபிள்யூ காரின் புது மாடல் நேற்று விற்பனைக்கான புக்கிங் தொடங்கிய நிலையில் நேற்று ஒரே நாளில் அனைத்து கார்களும் புக்கிங் முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பிஎம்டபிள்யூ என்பதும் இந்நிறுவனம் தயாரிக்கும் ஒவ்வொரு மாடல் காருக்கும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் கோடீஸ்வரர்கள் மட்டுமே வாங்கும் இந்த வகை கார்கள் மிக அரிதாகவே விற்பனையாகும் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் பிஎம்டபிள்யூ 9 என்ற எலக்ட்ரிக் கார் புக்கிங் நேற்று முன்பதிவு தொடங்கியது. நேற்று முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விறுவிறுப்பாக முன்பதிவு நடந்தது என்பதும் அனைத்து கார்களும் நேற்று மாலையே புக் செய்யப்பட்டதாகவும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று புக் செய்யப்பட்ட அனைவருக்கும் வரும் ஏப்ரல் மாதம் கார் சப்ளை தொடங்கும் என்றும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று புக்கிங் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தவர்கள் 2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மீண்டும் புக்கிங் நடைபெறும் என்றும் அப்போது புக்கிங் செய்து கொள்ளலாம் என்றும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் வகை கார் மாடல் ஒரே நாளில் புக்கிங் விற்று தீர்ந்துள்ளது, கார் சந்தையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.






