Connect with us

உலகம்

இதுவும் முகக்கவசம் தான்: உள்ளாடையை காண்பித்து களேபரம் செய்த பயணி!

Published

on

உள்ளாடையை முகத்தில் அணிந்து இதுவும் முகக்கவசம் தான் என விமான பயணி ஒருவர் களேபரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து விமான பயணிகளும் மாஸ்க் அணிந்து இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என உலகம் முழுவதும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவின் புளோரிடா நாட்டில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்றில் அனைத்து பயணிகளும் முக கவசம் அணிந்து இருக்கிறார்களா என விமான ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி உள்ளாடையை முகத்தில் முகக் கவசம் போல் அணிந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பயணியிடம் சரியான முகக்கவசத்தை அணியும்படி விமான ஊழியர்கள் வலியுறுத்தியபோது இதுவும் முகக்கவசம் தான் என்றும் முகக்கவசம் என்ன வேலை செய்கிறதோ அதே வேலையை இதுவும் செய்கிறது என்றும் வாதாடினார்.

மேலும் பல விமானங்களில் நான் பயணம் செய்த போது இதைத்தான் முகக்கவசமாக அணிந்து வந்து உள்ளேன் என்றும் அவர் வாதிட்டார். இதனை அடுத்து விமான ஊழியர்கள் அவரை வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து இறக்கி விட்டனர். இந்த சம்பவம் புளோரிடா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Discover the key differences between sun.