இந்தியா
‘நிறைய மாட்டுக்கறி சாப்பிடுங்க…’- மக்களிடம் பாஜக அமைச்சர் பேச்சு

மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் சன்போர் சுலாய், தங்கள் மாநில மக்கள் கோழிக்கறி, ஆட்டிறைச்சி, மீன் போன்றவற்றைவிட மாட்டிறைச்சியை அதிகம் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். பாஜக, மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் நிலையில், அதன் கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சர் ஒருவரே இப்படிப் பேசியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.
அவர் மேலும், ‘பாஜக மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் என்கிற எண்ணமே வேண்டாம். அது தூக்கியெறியப்படும். யாருக்கு என்ன வேண்டுமோ அதைச் சாப்பிடுவதில் எந்த வித தடையும் இருக்கக் கூடாது’ என்றார்.

அசாம் மற்றும் மேகலயா மாநிலங்களுக்கு இடையில் சமீப காலமாக எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பல்வேறு காரணங்களினால் எல்லையில் இரு மாநில மக்களும் மோதிக் கொள்ளும் சூழலும் ஏற்படுகிறது.
இரு மாநிலங்களிலும் பாஜக அரசு தான் ஆட்சி புரிந்து வருகிறது. அதே நேரத்தில் இரு மாநில அரசுகளும் இணக்கமாக இல்லாமல் தொடர்ந்து துடுக்கத் தனமான கருத்துகளைக் கூறி வருகின்றன.












