இந்தியா
46 மாவட்டங்களுக்கு வார்னிங்: வேகமாக பரவும் கொரோனா

இந்தியாவில் 46 மாவட்டங்களில் மீண்டும் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் கொரனோ பாதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும் 53 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதமாக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்கள் கவனக்குறைவாக இருந்தால் 46 மாவட்டங்களில் நிலைமை மேலும் மோசம் ஆக வாய்ப்பு இருப்பதாகவும், கொரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கு மேல் உள்ள 46 மாவட்டங்களில் மக்களின் நடமாட்டத்தையும் கூட்டத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80% பேர் வீட்டின் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்றும் உள்ளூர் நிர்வாகங்கள் இவர்களை தீவிரமாக கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியாவில் கடந்த 3 நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதை பார்க்கும் போது மூன்றாம் அலை இந்தியாவில் தோன்றி விட்டதோ என்ற அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







