சினிமா செய்திகள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சிம்புவா? வனிதா அடங்குவாரா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதால் அவருக்கு பதிலாக சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்து சீசன்கள் தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். விக்ரம் படத்தின் படப்பிடிப்பு உள்பட மற்ற பணிகள் இருப்பதால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகி கொள்வதாக கமல்ஹாசன் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் மீதி உள்ள நாட்களில் கமல்ஹாசனுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாகவும் இதுகுறித்த புரமோ வீடியோ நாளை வெளியாகும் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கமலஹாசன் என்பதால் அவரது வயது மற்றும் அனுபவத்திற்காக சற்று அடக்கி வாசித்த வனிதா, சிம்புவுக்கு கட்டுப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.













