ஆரோக்கியம்
எலும்புகள் வலுவாக இருக்க இதை சாப்பிடுங்க! பால், தயிரை விட சிறந்த கால்சியம் உணவுகள்!

முழங்கால், முதுகு, மூட்டு வலிகளுக்கு குட்பை சொல்லும் உணவுகள்!
நம் உடலை நிலையாக வைத்திருக்கும் முக்கிய உறுப்புகள் எலும்புகள். இவை வலுவாக இருந்தால் தான், மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகு வலி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சினைகள் எதுவும் வராது. அதற்கு, உணவில் கால்சியம் சத்து அதிகமுள்ள உணவுகளைச் சேர்ப்பது மிகவும் முக்கியம்.
அனைவரும் பாலும் தயிரும் கால்சியத்திற்கு முக்கியம் என நினைப்பது வழக்கம். ஆனால் உண்மையில், பால் தயிரை விட அதிக கால்சியம் கொண்ட இயற்கை உணவுகள் பல உள்ளன. அவற்றில் சிலவை இங்கே:
✅ ராகி (கேழ்வரகு):
ராகியில் அதிக அளவு கால்சியம் உள்ளது. குறிப்பாக முளைகட்டிய ராகி சத்துகள் செறிவாக கிடைக்கின்றன. இது எலும்புகளை வலுப்படுத்துவதில் மிகச் சிறந்தது.
✅ முருங்கை:
முருங்கைக்காயும், முருங்கை இலைகளும் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆக்சிஜனேற்றிகள் நிறைந்தவை. தினசரி உணவில் பருப்பு வகைகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
✅ எள்ளு:
நம் பாரம்பரிய உணவில் எள்ளு முக்கிய இடம் வகிக்கிறது. இதில் கால்சியம் மட்டும் அல்லாது மெக்னீசியமும் இருப்பதால், எலும்புகளுக்கு வலிமை சேர்க்கிறது.
✅ பாதாம் பருப்பு:
பாதாம், வால்நட், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள் ஊறவைத்து சாப்பிட்டால் அதிலுள்ள ஊட்டச்சத்துகள் முழுமையாக உறிஞ்சப்படும். இது எலும்புகளை வலுப்படுத்தும்.
✅ மீன் வகைகள்:
சால்மன், மத்தி போன்ற மீன்களில் கால்சியமும் வைட்டமின் D-வும் அதிகம். இது எலும்பு வளர்ச்சிக்கு அவசியமானவை.
குறிப்பு: இந்த உணவுகளை உங்கள் தினசரி டயட்டில் மாற்றி மாற்றி சேர்த்து வரும்போது, வயதான காலத்திலும் உங்கள் எலும்புகள் வலுவாக இருக்கும்.












