சினிமா செய்திகள்
சீனாவுக்கு செல்லும் முதல் அஜித் படம்!

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் சீனாவில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் 10ம் தேதி தமிழில் வெளியாகிறது.
இந்திய படங்களுக்கு சீனாவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. ரஜினியின் 2.0 சீனாவில் வரும் ஜூன் 21ம் தேதி 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
போனி கபூரின் மனைவி மற்றும் மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவியின் மாம் படம் சமீபத்தில் சீனாவில் ரிலீசாகி 100 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது. இதனால், சீனாவில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை திரையிட போனி கபூர் தரப்பு முயற்சித்து வருகிறது. நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத துவக்கத்தில் சீனாவில் படம் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


















