சினிமா செய்திகள்
ராஜமெளலி படத்தில் நானா? உற்சாகத்தில் சாய் பல்லவி!

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இங்கிலாந்து நடிகை டெய்சி எட்கர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தற்போது சாய் பல்லவி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரெளடி பேபி 50 கோடி பார்வைகளை கடந்து சாதனை, சூர்யாவின் என்ஜிகே கலவையான விமர்சனங்களை பெற்றாலும், முதல் வார இறுதியில் ராட்சத பாக்ஸ் ஆபிஸ் சாதனை என சாய் பல்லவிக்கு அடுத்தடுத்த சந்தோஷ செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், பாகுபலி இயக்குநர் ராஜமெளலி படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பும் வரப்போவது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
இந்தியாவை அடிமை படுத்திய ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய அல்லுரி சீதாராம ராஜு, கொமரம் பாபு ஆகியோரின் கதையை, 300 கோடி ரூபாய் எனும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஆர்.ஆர்.ஆர் என்ற பெயரில் ராஜமெளலி இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக டெய்சி எட்கர் எனும் இங்கிலாந்து நடிகை தேர்வு செய்யப்பட்டு முதல் கட்ட படப்பிடிப்புகள் நடந்தன. ஆனால், குடும்ப சூழல் காரணமாக தன்னால் படப்பிடிப்பில் தொடர முடியவில்லை என டெய்சி விலகினார்.
அதன் பின்னர் பாலிவுட் நட்சத்திரங்களிடம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ராஜமெளலி எடுத்த முயற்சிகள் பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்நிலையில், அந்த கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி செட் ஆவார் என்ற அடிப்படையில் அவரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, அவரும் ஓகே சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















