இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

- போலி பிஎப் கணக்கு மோசடி: சிபிஐ வழக்குப் பதிவு போலி பிஎப் கணக்குகள் மூலம் ரூ.19.33 கோடி மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், நோக்கியா நிறுவனத்தின் சில அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- TNEB திடீர் அதிரடி வருவாய் இழப்பை குறைக்க மின்சார வாரியம் புதிய நடைமுறை. 90+ நாட்கள் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை நீக்க திட்டம். மீட்டரை அகற்றவும் நடவடிக்கை. இந்த நடவடிக்கை குறித்து நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் அலர்ட் அனுப்பப்படும் என தகவல்.
- கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் கபினி அணையிலிருந்து 10000 கனஅடி நீர் திறப்பு.
- ஒடிஸாவில், முதுகலை மருத்துவ நுழைவுத்தேர்வு (postgraduate medical entrance examination) தொடங்கிய சில நிமிடங்களிலேயே, வாட்ஸ்அப் குழுவில் வினாத்தாள் கசிந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலத்த சோதனைகளுக்குப் பிறகும் தேர்வு மையத்திற்குள் செல்போன் கொண்டுசென்று, வினாத்தாளை புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளனர். இதுதொடர்பாக வாட்ஸ்அப் குழுவின் அட்மின் உட்பட, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிய டிஜிட்டல் ஆதாரங்களை அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.






