இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

- தேசியப்பாடலான வந்தேமாதரம் பாடலை அவமதித்தால் கடுமையான தண்டனை வழங்கம் வகையிலான தேசிய பெருமைகள் அவமதிப்பு தடுப்புத் திருத்த மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்.
மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் மதிய உணவாக சிக்ன் பிரியாணி வழங்கலாமா என்பது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்-கல்வி அமைச்சர் ராஜ்மோகன் - 2500 டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையங்களை தனியார் மயமாக்க விஜய் அரசு முடிவு.
- 151 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை ஒன்றிய அரசுக்கு ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு, அரசின் நிர்வாக தோல்வியே காரணம் என மருத்துவர்கள் சங்கம் கண்டனம்!* *தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அரசின் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சரண்டர் செய்ய எதிர்ப்பு கூட தெரிவிக்க முடியாமல் போயுள்ளது.*
- முதலமைச்சரின் தாயமானவன் திட்டத்தின் பெயரை நீக்கியது தவெக அரசு.
- கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்! – இணை உரிமையாளரின் சம்மதம் தேவையில்லை என உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
- தமிழகத்தில் காலியாக உள்ள தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர் பணியிடங்களை அடுத்த 6 வாரங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
- அரசு அலுவலர் மீது நேரடியாக குற்றப்புகார் அளிக்க முடியாது! BNSS பிரிவு 175(4)-ன் கீழ் புகார் அளிக்க, முதலில் பிரிவு 175(3)-ன் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! “அபிடவிட் இல்லாமல்… எஸ்.பி.-யை அணுகாமல்… நேரடியாக மாஜிஸ்திரேட்டை அணுகினால் புகார் விசாரணைக்கு ஏற்க முடியாது!”
- பணம் கொடுக்கல் வாங்கல், விற்பனை ஒப்பந்தம், சொத்து உரிமை, நிலத் தகராறு போன்ற சிவில் (Civil) பிரச்சினைகளில், போலீசார் “Current Paper Enquiry” என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து சமரசம் செய்ய வற்புறுத்துவது, பணம் வசூலிக்க அழுத்தம் கொடுப்பது போன்ற கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது! பணம், நிலம், விற்பனை ஒப்பந்த தகராறுகளில் போலீசார் தலையிட முடியாது – மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!











