Connect with us

சினிமா செய்திகள்

அஜித்தின் ‘வலிமை’ டீசர்: டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்!

Published

on

valimai

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும், இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிகட்டத்தை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ‘வலிமை’ படத்தின் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்த டீசர் நேற்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அஜீத் ரசிகர்கள் ‘வலிமை’ டீசர் என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். தற்போது இந்திய அளவில் டிரெண்டாகி வரும் இந்த ஹேஷ்டேக் விரைவில் உலக அளவில் ட்ரண்ட் ஆனாலும் ஆச்சரியம் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் வினோத் டுவிட்டர் பக்கத்தில் ‘வலிமை’ டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது வினோத்தின் உண்மையான டுவிட்டர் பக்கம் இல்லை என்றும் வினோத் அவர்களுக்கு எந்தவிதமான சமூக வலைதளத்திலும் கணக்குகள் இல்லை என்றும் அஜித் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியான செய்திகளின் படி அடுத்த வாரம் கண்டிப்பாக ‘வலிமை’ டீசர் வெளியாகும் என்றும் முன்னறிவிப்பின்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இந்த டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். மேலும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகுமா அல்லது தீபாவளிக்கு பின்னர் ரிலீசாகுமா என்பதும் டீஸரில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
digital product hosting :.