Connect with us

சினிமா செய்திகள்

‘அஜித் 70’, விஜய் 70’ ஒரே நேரத்தில் தயாராகுமா?

Published

on

தற்போது தளபதி 66 மற்றும் அஜித் 61 திரைப்படங்கள் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இன்னும் ஓரிரு வருடங்களில் அஜித் 70 மற்றும் தளபதி 70 ஆகிய திரைப்படங்கள் ஒரே நேரத்தில் தயாராகும் நிலை வரும் என்று கூறப்படுகிறது.

அஜித் தனது 61 வது படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கும் நிலையில் இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்பின்னர் ‘அஜித் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்பதும் அது போன்று ‘அஜித் 63’ படத்தை இயக்கும் இயக்குனரும் முடிவு ஆகி விட்டதாகவும் கூறப்படுகிறது .

ஒரு வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்கள் என்று அஜித் திட்டமிட்டுள்ளதாகவும் அனேகமாக விஜய்யின் 70வது படம் தயாராகும் போது அஜித்தின் 70வது படமும் தயாராகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

கடந்த சில ஆண்டுகளாக வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என்ற அளவில் தான் அஜித் நடித்து வருகிறார். ஆனால் ஓரிரு வருடங்கள் அவர் முழுக்க முழுக்க சினிமாவில் பிஸியாக இருக்க போவதாகவும் அதன் பிறகுதான் மற்ற பணிகளில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுவதால் வருடத்திற்கு 3 அஜித் படங்கள் கண்டிப்பாக வெளியாகும் என்று தெரிகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
me profile.