சினிமா
என்ன கருமம் டா இது.. சன்னி லியோன் படத்தோட ப்ரமோவை பார்த்தாலே யாரும் தியேட்டருக்கு வரமாட்டாங்க போல!
Published
1 month agoon
By
Saranya
இந்த ஆண்டு வெளியான வலிமை, பீஸ்ட், பிரின்ஸ் பட டிரைலர்கள் எல்லாம் பார்க்கும் போது படம் நல்லா இருக்கும்னு தியேட்டருக்கு வரவழைத்து ரசிகர்களை மொக்கைப் பண்ணினார்கள். ஆனால், சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தின் ப்ரமோக்களை பார்த்தாலே.. தம்பி அந்த பக்கம் போயிடாதா! என்பது போலவே உள்ளது.
இயக்குநர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி உள்ள பான் இந்தியா திரைப்படமான நம்புங்க அவங்க அப்படி தான் ப்ரமோஷன் பண்றாங்க.. பான் இந்தியா திரைப்படமான ஓ மை கோஸ்ட் படத்தின் ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை எச்சரித்து வருகின்றன.
இந்த படத்தில் தர்ஷா குப்தா, ஜிபி முத்து, சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட பேர் உள்ளனர். அட்லீஸ்ட் அவர்களை வைத்தே முலாம் பூசி ரசிகர்களை ரிலீஸ் வரையாவது ஏமாற்றி இருக்கலாம். ஆனால், ரசிகர்கள் தியேட்டரில் வந்து காரி துப்பக் கூடாது. இப்படித்தான் படம் எடுத்து இருக்கிறோம், தில் இருந்தா வந்து தலைவி சன்னி லியோனை பார்த்துட்டு போங்க என சொல்வது போல வெளியாகி உள்ள ப்ரமோக்கள் ஓடிடியில் வெளியானால் கூட அந்த பக்கம் தலை வைத்து படுத்து விடக் கூடாது என எச்சரித்து அனுப்புகிறது.
பாலிவுட்டில் வயசாகிடுச்சுன்னு குத்தாட்ட பாட்டுக்கு கூட சன்னி லியோனை கூப்பிடாமல் தீபிகா படுகோனேவே கர்ச்சிப் கட்டிக் கொண்டு ஆடி வரும் நிலையில், அப்படியே நைஸா கோலிவுட்டில் கோட்டையை பிடித்து விடலாம் என சன்னி லியோனை இயக்குநர் நல்லாவே பிரைன் வாஷ் பண்ணி அழைத்து வந்து ஏமாற்றி உள்ளார் என இன்னமும் சன்னி லியோனின் அந்த படங்களை பார்க்கும் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். இந்த வாரம் தியேட்டரில் வெளியாக உள்ள சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்திற்கு பிரத்யேகமாக பிரஸ்மீட் ஒன்றும் இன்று சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
You may like
-
என் மூஞ்சி ஜோக்கர் மூஞ்சி; எப்பவும் நான் காமெடியன் தான் – யோகி பாபு உருக்கமான பேச்சு!
-
எனக்கு இதை தவிர வேற தெரியாது பாஸ்; மீண்டும் கவர்ச்சியில் குதித்த தர்ஷா குப்தா!
-
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஜிபி முத்துவுக்கு அடித்த ஜாக்பாட்!
-
இனிமே கவர்ச்சி காட்டாதீங்க தர்ஷா! இப்படியே திறமையை இன்ஸ்டாகிராமிலும் காட்டுங்க; நெட்டிசன்கள் கலாய்!
-
நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி தப்பா பேசுறீங்க; தர்ஷா குப்தா செல்லத்தை இப்படி அழ விட்டுட்டாங்களே!
-
சன்னிலியோனின் ஐந்து மொழி திரைப்படம்: விஜய்சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட்லுக் போஸ்டர்!