Connect with us

சினிமா செய்திகள்

ஒரு நபரின் கையில் எல்லா திரையரங்குகளுமா? உதயநிதியை மறைமுகமாக தாக்கினாரா திருமாவளவன்?

Published

on

தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் ஒருவர் கையில் சென்றுவிட்டால் ஆபத்தானதாக முடிந்து விடும் என்றும் நான் யாருக்கும் எதிராக பேசவில்லை என்றும் எனக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது என்றும் திரைப்பட விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக திரையுலகை பொறுத்தவரை தற்போது ஒரு நபரின் கையில் தான் இருக்கிறது என்றும் அந்த நபர் விரும்பினால் மட்டுமே ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆக முடியும் என்றும் இல்லையென்றால் ரிலீஸ் தடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ’இரும்பன்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இன்று கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் ஒரு நபர் கையில் திரை திரையரங்குகள் வந்து விட்டால் என்ன ஆகும்? என்று கேள்வி எழுப்பினார்./ மேலும் திரைத்துறை கார்ப்பரேட் மயமாகி வருகிறது என்றும், கார்ப்பரேட் கையில் சினிமா சென்றால், தொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள் இயக்குனர் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் இது தொழில் போட்டி மட்டுமல்ல தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதாகும் என்றும் கூறினார்.

நான் யாருக்கும் எதிராக பேசவில்லை என்றும் எனக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்றும் திரைத்துறை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பேசுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலுக்கும், திரை உலகிற்கும் 50 ஆண்டுகால தொடர்பு உண்டு என்றும் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழக முதல்வராகவும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளனர் என்றும் இவர்கள் அனைவரும் சினிமாவில் இது தான் வந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

சினிமாவுக்குள் திராவிட அரசியலை கொண்டுவந்தது தமிழகம் என்றும் சினிமாவில் இருந்தவர்கள் 50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் அமர வாய்ப்பு கிடைத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் அழகை காட்டி ஆட்சியை பிடிக்க வில்லை என்றும் அரசியல் பேசினார், அண்ணாவின் கொள்கைகளை பேசினார், சமூக நீதிகளை பேசினார், அதோடு மக்களை அவர் மிகவும் நேசித்தார். அதனால்தான் அவரால் முதல்வராக முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக மாற்றத்திற்கான ஆயுதமாக சினிமாவை மாற்றலாம் என்றும் சினிமா என்பது மிகப்பெரிய ஆயுதம் என்றும் அந்த ஆயுதம் கலையை ரசிக்க மட்டுமின்றி சமூக மாற்றத்திற்கான கருவியாக இருக்க வேண்டும் என்றும தெரிவித்துள்ளார்.

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?