சினிமா செய்திகள்
தனது உடலை கேலி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த நடிகை வரலட்சுமி சரத்குமார்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தன் மீதான உடல் கேலிகள் குறித்து வருத்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். இதனால் இணையத்தில் வரும் உடல் கேலிகள் குறித்து அவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்று கேட்கப்பட்டது.

Varalakshmi Sarathkumar
அதற்கு பதில் அளித்த அவர், ‘என்னுடைய உடல் என்பது என் உரிமை. நான் இப்பொழுது ஹைதராபாத்தில் செட்டிலாகி விட்டேன். அதிகளவில் தெலுங்கு படங்களுக்கான வாய்ப்பு வருவதால் அதில் கவனம் செலுத்தி வருகிறேன்.
சென்னைக்கு வேலை இருக்கும்பொழுது மட்டுமே வந்து போய் கொண்டிருக்கிறேன். அதனால், தெலுங்கில் ரசிகர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்களோ அந்த கதைக்களத்திற்கு என்ன தேவையோ அதற்கு ஏற்ற மாதிரி என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.

Varalakshmi Sarathkumar
அதுமட்டுமில்லாமல், உடல் எடை அதிகமாக இருப்பதால் சில உடல் நல பிரச்சனைகளையும் நான் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதன் பொருட்டே நான் உடல் எடையை குறைத்தேன்.
அதனால் யார் என்ன சொன்னாலும் கவலை வேண்டாம். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்’ என்று உடல் கேலிகளை தான் பொருட்படுத்தவில்லை என்று வரலட்சுமி பேசியுள்ளார். வரலட்சுமி போலவே நடிகை ராஷ்மிகா மந்தானாகவும் சமீபத்தில் தான் எதிர்கொண்ட உடல் கேலிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.