சினிமா செய்திகள்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை வரலட்சுமி!

நடிகை வரலட்சுமி சரத்குமார், சென்னை எழும்பூரில் உள்ள ‘Institute of Child Health’-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்து தனது பிறந்தநாளைக் கொஏற்படுத்தும்.
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பேசுகையில், “புற்றுநோயாளிகள் பலரைக் காப்பாற்றும் இதயத்தைத் தொடும் பணியைச் செய்து வரும் மீட்பர்களான மருத்துவர்களுடன் இந்த பிறந்தநாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நமது நெருங்கிய, அன்புக்குரியவர்கள் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்படும்போது மட்டுமே புற்றுநோய் குறித்து சிந்திக்கிறோம். இவர்களுக்கு நாம் எதாவது நன்மை செய்ய வேண்டும் என்றால், நாம் அதிகம் சிரமப்படவோ அல்லது பெரிய அளவில் ஏதாவது பங்களிக்கவோ தேவையில்லை. ஆனால், குறைந்தபட்சம் ரூ.10 கொடுப்பது கூட பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சென்னையிலிருந்து கொல்கத்தா வரை 1746 கிமீ தூரத்தை சைக்கிள் பயணம் மேற்கொண்டு முடித்தவர்களைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். நெகிழ்ச்சியாக உள்ளது.
பல நோயாளிகளைக் குணப்படுத்தி, அவர்களின் உயிர்காக்கும் பணியில் உள்ள சங்கல்ப் மற்றும் மருத்துவர்கள் என்னை மிகவும் நெகிழ வைத்துள்ளனர். பல நோயாளிகள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பலரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நடிகை வரலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கினார் மற்றும் புற்றுநோய் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னையிலிருந்து கொல்கத்தா வரை 1746 கிமீ தூரத்தை சைக்கிளில் பயணித்து முடித்தவர்களைப் பாராட்டினார்.