சினிமா செய்திகள்
சமந்தா: ‘நம்பிக்கையே உங்களை சூப்பர் ஹியூமனாக மாற்றும்

நம்பிக்கையே உங்களை சூப்பர் ஹியூமனாக மாற்றும் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை சமந்தா மையோசிடிஸ் என்னும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த சமந்தா பின்பு அது குறித்து வெளிப்படையாக தெரிவித்தார். இப்போது அதற்கான தீவிர சிகிச்சையில் இருப்பதையும் தெரிவித்தார்.
சில மாதங்கள் இந்த சிகிச்சைக்காக சமந்தா படங்களுக்கு பிரேக் விடுவார் என சொல்லப்பட்ட நிலையில் அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்து ‘குஷி’, ‘சிட்டாடல்’ வெப் சீரிஸ் என மீண்டும் படங்களுக்காக பரபரப்பாக தயாராகி வருகிறார். சமந்தா இதில் ‘குஷி’ படப்பிடிப்பிலும் சமீபத்தில் இணைந்தார். இந்த நிலையில் நடிகை சமந்தா நம்பிக்கையூட்டும் விதமாக ஒரு பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘சில சமயங்களில் சூப்பர் ஹியூமனுக்கு என தனி சக்தி தேவைப்படுவதில்லை. உங்களது நம்பிக்கையும் உண்மையுமே அதைத் தரும். அதுவே உங்களை அமைதிப்படுத்தும். அந்த நம்பிக்கை உங்களுக்கு நண்பனாகவும் நல்ல ஆசிரியராகவும் மாறும். அதுவே உங்களை சூப்பர் ஹியூமனாகவும் மாற்றும்’ என பாசிட்டிவாக தெரிவித்துள்ளார் சமந்தா.
சமந்தாவின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது அன்பையும், விரைவில் சமந்தா குணமடைய வேண்டும் என்ற வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். சமந்தா நடித்துள்ள ‘யசோதா’ திரைப்படம் பான் இந்தியா வெளியீடாக அடுத்த மாதம் 3டியில் வெளியாக இருக்கிறது.