சினிமா செய்திகள்
சைமா விருதுகள்: சிறந்த வில்லியான வரலட்சுமி சரத்குமார்!

2018ஆம் ஆண்டுக்கான சைமா விருதில் சிறந்த வில்லியாக வரலட்சுமி சரத்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கத்தாரில் நடந்துவரும் இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்களுக்கு சைமா விருது வழங்கப்பட்டு வருகிறது. தனுஷ், ஜெயம் ரவி என பலருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் சிறந்த வில்லிக்கான விருதை சர்கார் படத்திற்காக வரலட்சுமி சரத்குமார் தட்டிசென்றுள்ளார். சிறந்த நடிகருக்கான விருது வடசென்னை படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகைக்கான விருது 96 படத்தில் நடித்த நடிகை த்ரிஷாவுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக விகடன் விருது விழாவிலும் நடிகருக்கான விருது தனுஷுக்கும், நடிகைக்கான விருது த்ரிஷாவுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விமர்சகர் குழு தேர்வு செய்யப்பட்ட சிறந்த நடிகர் விருது அடங்கமறு படத்திற்காக நடிகர் ஜெயம் ரவிக்கும், சிறந்த நடிகை விருது கனா படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வழங்கப்பட்டது.

டிக் டிக் டிக் படத்தில் நடித்த ஜெயம் ரவியின் மகன் ஆரவிற்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகர் விருதினை யோகிபாபு தட்டிச் சென்றார்.
















